காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2-ஆம் தேதி, பெண்களுக்கான வெற்றிப் பயண திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கிவைக்கிறார். தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் மகளிர் விடியல் பயண திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சாதாரண நகர அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வசதி இருந்து வருகிறது.
தற்போது, தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, இந்த திட்டத்தின் பெயரை வெற்றிப் பயணத் திட்டம் என்று மாற்றியதுடன், சாதாரண நகர பேருந்துகளையும் தாண்டி, எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும், பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2-ஆம் தேதி, பெண்களுக்கான வெற்றிப் பயண திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கிவைக்கிறார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இந்த திட்டத்தை அவர் தொடங்கிவைப்பார் என தெரிய வருகிறது.

