மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் த.வெ.க.வேட்பாளர் மரகதம்-குமரவேலுவை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், முதலமைச்சர் விஜய்யுடன் தொல்.திருமாவளவன் இருப்பது மிகப்பெரிய பலம் என்றும், அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் த.வெ.க.வேட்பாளர் மரகதம்-குமரவேலுவை ஆதரித்து, த.வெ.க.கூட்டணி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பிரச்சார கூட்டத்தில், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ்அர்ஜுனா, நிர்மல்குமார் ராஜ்மோகன், அமைச்சர் வன்னியரசு ரவிக்குமார், மரியம்வில்சன் உள்ளிட்ட த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அமைச்சர் ஆனந்த் உரையாற்றினார். அப்போது, முதலமைச்சர் விஜய்யுடன் தொல்.திருமாவளவன் இருப்பது மிகப்பெரிய பலம் என்றும், ஒரே மேடையில் ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் இருப்பது பலம் என்றும் தெரிவித்தார்.
மேலும், இங்கு ஊழல் இல்லாத தலைவர்கள் அமர்ந்துள்ளனர் என்றும், இது முதலமைச்சர் ஜோசப் விஜய்யால் சாத்தியமானது என்றும் அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.




