
நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் தான் இட்லி கடை. இந்த திரைப்படத்தில் தனுஷ், நிதயா மேனன், அருண் விஜய், ராஜ் கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்ட நிலையில், அஜித்தின் திரைப்படம் வெளியாகியதால் இட்லி கடை திரைப்படத்திற்கு திரையரங்குகள் பற்றாக்குறையால் இதன் வெளியாகும் நாள் தள்ளிப்போயுள்ளது. இந்த நிலையில் இட்லி கடை படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது.

இட்லி கடை திரைப்படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு தேனியில் தான் நடைபெற்றது. இதற்காக தேனியில் மிகப்பெரிய செட் போடப்பட்டிருந்தது. இதற்காக தேனியில் மிகப்பெரிய செட் போடப்பட்டது. இங்கு சுமார் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் படப்பிடிப்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த செட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தீ விபத்து ஏற்பட்ட படப்பிடிப்புத் தளத்தில் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.




