CM Stalin: தேர்தல் முடியும் வரை கவர்னரை மாற்ற வேண்டாம்!

தேர்தல் முடியும் வரை கவர்னரை மாற்ற வேண்டாம்! முதல்வர் ஸ்டாலின்.

சென்னை: லோக்சபா தேர்தல் முடிவடையும் வரை, கவர்னரை மாற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்

சென்னையில் நடந்த திருமண விழாவில் ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் தான் சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அதிகளவில் சீர்திருத்த திருமணங்கள் நடந்துள்ளது. நான் சென்னை மேயராக இருந்த போது, குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டன.

தமிழக மக்கள் கவர்னர் ஆர்.என். ரவியை பொருட்படுத்தவில்லை. லோக்சபா தேர்தல் முடிவடையும் வரை, இங்கிருக்கும் கவர்னரை மாற்றிவிட வேண்டாம் என பிரதமரை கேட்டுக்கொள்கிறேன்.

மாளிகையில் அமர்ந்து கொண்டு, யார் யாரோ திராவிடம் என கேட்டு கொண்டிருக்கின்றனர். திராவிடம் என்றால் என்ன என கேட்க வைத்திருக்கிறோமே. அது தான் திராவிடம். திராவிடம் என்றால் என்ன என கேட்பவர் தொடர்ந்து இங்கேயே இருக்க வேண்டும்.வரும் காலத்தில் ஆண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்க வேண்டிய நிலை ஏற்படும். இது தான் திராவிட மாடல். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *