ஒரேடியா final பண்ணியாச்சு.. விசிக , மதிமுக கட்சிக்கு எவ்வளவு தொகுதி தெரியுமா..?

Advertisements

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு , தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு வருகிறது .. இந்நிலையில் , நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக போன்ற கட்சிகளுக்குm தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு கையொப்பம் ஆகியுள்ளது.. இது பற்றிய விரிவான செய்திகளை தற்போது பார்க்கலாம்……

காங்கிரசுக்கு 28, முஸ்லீம் லீக் -2, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி -2 , மனித நேய மக்கள் கட்சி -2 , மதிமுக -4, இந்திய கம்யூனிஸ்ட் -5 வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது… மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த நிலையில் , முதலைமைச்சர் முக ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று 5 தொகுதிகளை ஏற்றுக்கொண்டு நேற்று உடன்பாடு ஏற்பட்டது .. இதனை தொடர்ந்து , திமுக – விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது..

இதன் மூலம் கூட்டணி கட்சிக்குள் இருந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது..மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கும்படி திமுகவிடம் கோரிக்கை வைத்தது. மேலும் முதல்வர் ஸ்டாலினை, திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது கடந்த முறை 6 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை இரட்டை இலக்கத்தில் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் திமுக அதற்கு உடன்படவில்லை. திருமாவளவனிடம், முதல்வர் ஸ்டாலினே முக்கிய கோரிக்கையை முன்வைத்தார். இந்த முறை கூட்டணியில் கூடுதல் கட்சிகள் வந்துள்ளன.

இதனால் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க முடியாது என்று உறுதியாக கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் திருமாவளவன் தனது வருத்தத்தை வீடியோ மூலமாகவும், பத்திரிகையாளர்கள் சந்திப்பின் வாயிலாகவும் தெரிவித்து இருந்தார். இப்படியான சூழலில் தான் இன்று முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது இருகட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டு பேசப்பட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு கையெழுத்தானது.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த 8 தொகுதிகளில் 2 பொதுத்தொகுதிகளும், 6 தனித்தொகுதிகளும் அடங்கும். இந்த முறை இரட்டை இலக்கத்தில் தொகுதி வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் பிடிவாதம் பிடித்த நிலையில் திருமாவளவின் மனதை முதல்வர் ஸ்டாலின் கரைத்து வெற்றி கண்டுள்ளார். இதன்மூலம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தப்படியாக விசிகவிற்கு தான் அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த சட்டசபை தேர்தலில் விசிகவிற்கு 6 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 4 இடங்களில் விசிக வெற்றி பெற்றது. 2 இடங்களில் தோல்வியை சந்தித்தது. மேலும் கடந்த முறை விசிக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லை. ஆனால் கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட 2 இடங்களிலும் விசிக வெற்றி பெற்றது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக விசிக மாறிய நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் 6 தனித்தொகுதி + 2 பொதுத்தொகுதி என மொத்தம் 8 தொகுதிகளில் விசிக களமிறங்க உள்ளது.

மேலும் , இன்று அல்லது நாளைக்குள் தேமுதிக, மக்கள் நீதி மய்யம், மஜக, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடும் கையெழுத்தாகும் என சொல்லப்படுகிறது. மேலும், தமிழகமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த வெ – தேர்தல் பணிகளில் கொஞ்சம் அமைதியாக வேலை செய்து வருகின்றனர்..அந்த வகையில் , தற்பொழுது வரை தமிழக வெற்றி கழகம் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காத நிலையில் , இந்த தேர்தலை தனியாகத்தான் சந்திக்குமோ என்ற கேள்வி அனைவரிடம் எழுந்துள்ளது ..

இந்த நிலையில் தவெக – தலைமை விசிக தலைவர் திருமாவளவனிடம் தவெக தரப்பு இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது .. அதில், உங்களுக்கு போதிய சீட் , உரிய மரியாதை அளிக்கப்படும் என்று சொல்லி கூட்டணிக்கு அழைத்ததாக தகவல் வெளியானது.. அதற்கு திருமா தரப்பில் , நீங்கள் என்னை கூட்டணிக்கு அழைத்ததற்கு நன்றி .. நான் ஒருபோதும் திமுக – கூட்டணியை விட்டு வெளியேற மாட்டேன் என்று கூறி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது….

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *