எம்எஸ் சுவாமிநாதனின் சாதனைகளை நினைவுகூர்ந்த ஸ்டாலின்!

Advertisements

வேளாண் அறிவியலாளர் எம்எஸ் சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது சாதனைகளை நினைவுகூர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போரூர் , தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி ஆகியவற்றுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் பெயரைத் தனது அரசு சூட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பயிர்ப் பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெறும் மாணவருக்கு எம்எஸ் சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எம்.எஸ். சுவாமிநாதனை அடியொற்றி, மேலும் பல மாணவர்கள் சமூகத்துக்குப் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *