த.வெ.க.-வின் 3ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கிறார் விஜய்!

Advertisements

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைக் கடந்த ஆண்டு தொடங்கினார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி பிரமாண்டமாக நடந்தது.

இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்மாநாட்டில் விஜய்யின் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மாநாட்டைத் தொடர்ந்து2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. இதற்காக, நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகள் த.வெ.க.வில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தச் சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்ட செயலாளர்களை அறிவித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்திருந்தார். நிர்வாக வசதிக்காகத் த.வெ.க. 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் என 15 பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

அதன்படி, த.வெ.க-வின் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் 2 கட்டங்களாக வெளியிடப்பட்டது.

இந்நிலையில் 3ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலைத் த.வெ.கத்தலைவர் விஜய் வெளியிட உள்ளார். கிருஷ்ணகிரி, தர்மபுரி கிழக்கு, சேலம், கோவை, வடசென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *