
சீனா :
சீனாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் மேற்கே அமைந்த சிச்சுவான் மாகாணம், ஜிங்காங் நகரில் வணிக வளாகம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, சுமார் 300-க்கும் மேற்பட்டோர், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பலர் சிக்கி கொண்ட நிலையில், 30 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .




