கோவளம் நன்னீர்த் தேக்கத் திட்டத்தை கைவிட சீமான் வலியுறுத்தல்.!

Advertisements

கோவளம் நன்னீர்த் தேக்க திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமூக வலைத்தளத்தில் கோவளம் நன்னீர்த் தேக்கத் திட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

இதில், கோவளம் நன்னீர்த் தேக்கத் திட்டத்தின் தொலைநோக்கு சிக்கல்களை கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வளர்ச்சி என்பது நிலத்தையும், வளத்தையும் மேலும் அந்த நிலத்தைச் சார்ந்து வாழும் மனிதர்களையும் உள்ளடக்கியது என்றார். 16 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பலிகொடுத்து உருவாக்கப்படும் இந்த நன்னீர்த் தேக்கம், சூழலியல் மீட்டுருவாக்கத்திற்குப் பதிலாக அழிவுக்கே இட்டுச்செல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *