Advertisements

தூத்துக்குடி :
தூத்துக்குடியில் அமைந்துள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில், ஆனி பெருந்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில், ஆனி பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில், வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வழிபாடு செய்தனர். மேலும், கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த
பிஸ்கட்டால் உருவாக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து, கயிறு சுற்றி ஆடுதல், மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல், வானவேடிக்கை, மற்றும் 1 மணிக்கு நாராயணன் பாமா ருக்மணியுடன் திருவீதி உலா வருதல் போன்றவை சிறப்பாக நடைபெற்றது.

Advertisements


