Weather update : தமிழகத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

Tamilnadu Weather :
தமிழகத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்ககடல் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் இன்று 12 முதல் 20 செமீ வரை
மழைக்கு வாய்ப்புள்ளதால் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இதனால், கடலோர பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *