Chilli Bread Recipe: பிரட் சில்லி ரெசிபி!

Advertisements

தினம் தினம் ஒரே மாதிரியான சாப்பாட்டை சாப்பிட்டு பழகிப் போகிவிட்டது. இந்த மாதிரியான பிரட் சில்லி ரெசிபியையும் செய்து சாப்பிட்டு பார்ப்போம் வாங்க. இதைச் செய்வது கஷ்டம் கிடையாது. அதை மிகவும் சுலபமான முறையில் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

பிரட் -6 பிஸ்
எண்ணெய் -1/4 லிட்டர்
இஞ்சி – 3 துண்டுகள்

பூண்டு – 2 துண்டுகள்
வெங்காயம் – 2

தக்காளி – 2
குடமிளகாய் – 1

மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
கரம்மசாலா – சிறிதளவு

ரெட் சில்லி சாஸ் – 1 ஸ்பூன்
சோயா சாஸ் -1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை:

6 பிரட்களை சிரியதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும், இஞ்சி பூண்டுகளை நசுக்கி வைத்துகொள்ளுகள், வெங்காயம் தக்காளி குடைமிளகாய் இவை அனைத்தையும் நறுக்கிக்கொள்ளவும்.

வானொலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிவைத்த பிரட் துடுகளை வாட்டி எடுத்துவைத்துக்கொள்ளவும்.

பின்பு அதே வானொலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நசுக்கி வைத்த இஞ்சி பூண்டை அதில் போட்டு வதக்கவும்.

அதன் பின் இஞ்சி பூண்டு வதங்கியதும் அதேனுடன் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். பிறகு வெங்காயம் வதங்கியதும் தக்காளி குடைமிளகாய் போட்டு வதக்கவும். இவை சீக்கிரமாக வதங்கச் சிறிது உப்பு சேர்த்து வதக்குகள்.

அனைத்தும் வதங்கியபின் அதேனுடன் மிளகாய் தூள் 1/2 ஸ்பூன், கரம்மசாலா சிறிதளவு ஆகியவற்றை போட்டு அதென் பச்சை தன்மை போகும் வரை வதக்கவும். பின்பு ரெட் சில்லி சாஸ்1 ஸ்பூன், சோயா சாஸ்1 ஸ்பூன் போட்டு வதக்கவும் முன்பு சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்வதால் இப்பொழுது சிறிது உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும்.

அந்த மசாலா கொதித்த பின் அதனுடன் வாட்டி எடுத்துவைத்த பிரட்டை போட்டு நன்கு கலந்து விடவும். கலந்த பின் கொஞ்சம் கொத்தமல்லிதலை சேர்த்து இறக்கவும் இப்பொழுது சுவையான பிரட் சில்லி ரெடி.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *