சமந்தா திருமணம் முடிந்த 3ஆம் நாளில் நாக சைதன்யா மனைவி வெளியிட்ட பதிவு.!

Advertisements

நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் இயக்குனர் ராஜ் நிதிமோரு ஆகியோர் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்து கொண்டு சில நாட்களே ஆகின்றன. டிசம்பர் 1ஆம் தேதி இருவரும் இல்லற வாழ்க்கையில் இணைந்தனர்.

சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணப் படங்களையும் வெளியிட்டிருந்தார். புதுமணத் தம்பதியினரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.சமந்தா திருமணம் முடிந்த 3ஆம் நாளில் நாக சைதன்யா மனைவி நடிகை சோபிதா துலிபாலா வெளியிட்ட பதிவு கவனம் ஈர்த்து வருகிறது.

நாக சைதன்யா கடந்த ஆண்டு இதே டிசம்பர் மாதம் சோபிதா துலிபாலாவை மணந்தார். டிசம்பர் 4, 2024 அன்று ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இருவருக்கும் திருமணம் முடிந்தது. இன்றுடன் தங்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் திருமண வீடியோவை நாக சைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் பகிர்ந்துள்ளனர்.

திருமதியாகி ஓராண்டு நிறைவு என்று தனது திருமண வீடியோவை பகிர்ந்துள்ள நடிகை சோபிதா அதில், சூரியனை முழுவதும் சுற்றி வந்த இந்த ஓராண்டில், தனது கணவர் நாக சைதன்யாவுடனான வாழ்க்கையில் தன்னை புதிதாக உணர்வதாக சோபிதா பதிவிட்டுள்ளார். அக்கினியால் சுத்தமடைந்தது போன்று உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *