திருப்பதி லட்டை அரசியலாக்கி விட்டதாக பூமன் கருணாகர ரெட்டி குற்றச்சாட்டு.!

Advertisements

திருப்பதி வெங்கடேஸ்வரரின் லட்டைச் சந்திரபாபு நாயுடும், பவன் கல்யாணும் அரசியலாக்கி விட்டதாகக் கோவில் முன்னாள் அறங்காவலர் பூமன் கருணாகர ரெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஒய்எஸ்ஆர்காங்கிரஸ் தலைவரும் திருப்பதி கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவருமான பூமன் கருணாகர ரெட்டி, ஆந்திரத்தின் அமராவதியில் செய்தியாளரிடம் பேசினார்.

ஜெகன்மோகன் ஆட்சிக்காலத்தில் திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்கின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாகத் தெலுங்குதேசத் தலைவர் சந்திரபாபு நாயுடும், ஜனசேனா தலைவர் பவன் கல்யாணும் பொய்யாகக் குற்றஞ்சாட்டியதாகக் கூறினார்.

இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டால் ஜெகன்மோகன் ரெட்டியின் புகழுக்குக் களங்கம் விளைவித்தது மட்டுமல்லாமல், வெங்கடேசுவரரின் புனிதத்தையும் பெருமையையும் சீர்குலைத்ததாகக் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பாக விசாரித்து சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கையில், வெங்கடேசுவரரின் லட்டில் விலங்கின் கொழுப்பு சேர்க்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தன் மீதான குற்றச்சாட்டு பொய்யானது எனத் தெரியவந்ததால் பரிகார ஓமம் நடத்திப் பூசை செய்து பூமன் கருணாகர ரெட்டி வழிபாடு நடத்தினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *