Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 28.12.2023

Advertisements
மேஷம்

 

மேஷ ராசிக்காரர்களே அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் சிலர் உங்களை தேடி வந்து உதவி கேட்பர். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். வாகனம் செலவு வைக்கும். உறவினர்களால் லாபம் உண்டு. எடுத்துக்காரியத்தை செய்து முடிப்பீர்கள். மேலும் என்று சித்தர்களை வழிபட இனிமையான நாளாக அமையும் என்று அதிர்ஷ்ட எண் 9.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே முகப் பொலிவு கூடும். அழகை கூட்டுவதில் நாட்டம் கொள்வீர்கள். இன்று பெண்களுக்கு அற்புதமான நாளாக அமைகிறது. அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்கள். மேலும் இன்று சிவபெருமானை வணங்கி வர இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 1.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்களே பேச்சில் தெளிவு இருக்கும் பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த முடிவுகளை எடுப்பீர்கள். பழைய வழக்குகளில் முன்னேற்றம் உண்டு. வெளிநாட்டு பயணம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வீர்கள். மேலும் இன்று முருகப்பெருமானை வணங்குகிறேன் இனிமையான நாளாக அமைய இன்றைய அதிர்ஷ்டம் 2.

கடகம்

 

கடக ராசிக்காரர்களே  இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும். அனைவராலும் மதிக்கப்படுவீர்கள். தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். மேலும் இன்று விநாயகரை வணங்கி வர இனிமையான நாளாக அமைய இன்றைய அதிர்ஷ்ட எண் 3.

 

சிம்மம்

 

சிம்மராசிக்காரர்களேமனக் குழப்பங்கள் விலகி தெளிவு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். வழக்கில் வெற்றி கிட்டும். இன்று தானம் செய்வது சிறப்பு. மேலும் இன்று பைரவரை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் என்று அதிர்ஷ்ட எண் 6.

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களே பழைய பிரச்சினைகளால் கவலைகள் வந்து நீங்கும்.நீங்கள்  பேசும்போது கவனமாக இருக்கவும். வாகனம் செலவு வைக்கும். மேலும் இன்று தன வரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த ஒன்று வந்து சேரும். மேலும் இன்று ஆஞ்சநேயரை வணங்கி வர இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 8.

 

துலாம்

 

துலா ராசிக்காரர்களே விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்த்து, குடும்பத்தினரை அனுசரித்துப் போகவும். திடீர் செலவுகள் உண்டு. மன அமைதிக்கு தியானம் செய்யவும். அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வர நிம்மதி கிட்டும். இன்று கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. மேலும் இன்று பெரு மாலை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 5.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களே உறவினர், நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளால் அனுகூலங்கள் ஏற்படும். மேலும் இன்று மஹாலக்ஷ்மி வணங்கி வர இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 7.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களே நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.சகோதர வகையில் நன்மை பிறக்கும். தன்னம்பிக்கை, உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வீடு, வாகனத்தை மாற்றுவதற்கு உண்டான யோசனைகள் அதிகமாகும். வாகனம் மற்றும் வீட்டை பழுது பார்ப்பதற்கு ஏற்ற நாள். மேலும் இன்று ஹயக்ரீவரை வணங்கி வர இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 6.

 

மகரம்

 

மகர ராசிக்காரர்களே. இன்று சுப விரயம் உண்டு .சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் என்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். புனித தலங்கள் சென்று வர வாய்ப்புகள் ஏற்படும். மேலும் இன்று வலம்புரி விநாயகரை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் என்று அதிர்ஷ்ட எண் 2.

கும்பம்

 

கும்ப ராசிக்காரர்களே சோர்வு நீங்கி துடிப்புடன் காணப்படுவீர்கள். தம்பதிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் உண்டு. வெளிநாட்டு பயணம் கைகொடுக்கும். படிப்பில் அக்கறை மற்றும் கவனம் அதிகமாகும். மேலும் இன்று சூரிய பகவானை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 5.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களே அக்கம் பக்கம் இருப்பவர்களை உங்கள் பேச்சால் கவருவீர்கள். அடுத்தவர்களை குறை கூறுவதை விரும்ப மாட்டீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்த உயர் பதவி கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். பிள்ளைகளால் அலுவலகம் உண்டு. மேலும் இன்று வன துர்கையை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 8.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *