தனியார் மயமாகும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம்!

Advertisements

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் 625 வழித்தடங்களில் 3,436 அரசுப்பேருந்துகள், மாநகர போக்குவரத்துக்கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

பணிக்குச் செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் எனத் தினந்தோறும் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.

மேலும் மகளிருக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பஸ் பாஸ், முதியவர்களுக்கான சிறப்புச் சலுகை மற்றும் என மக்களுக்குப் பயன் தரக்கூடிய பல திட்டங்களையும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தி வருகிறது.

சென்னையில் அரசுப்பேருந்துகள் மட்டுமே இயங்கி வந்த நிலையில், தனியார் பேருந்துகளையும் இயக்க மாநகர் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.

இதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், மாநகர போக்குவரத்து கழகம் தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கையில் அரசு இறங்கி உள்ளது.

சென்னையில் GCC முறையில் 600 மின்சார பேருந்துகளைத் தனியார் இயக்க ஒப்பந்த புள்ளியை மாநகர போக்குவரத்து கழகம் கோரியுள்ளது.

அதன்படி, மின்சார பேருந்துகளுக்கான நடத்துநர் நியமனம் போக்குவரத்து கழகம் சார்பிலும், பேருந்து பராமரிப்பு, ஓட்டுநர் நியமனம் உள்ளிட்டவை Gross Cost Contract அடிப்படையில் தனியார் மூலமாகவும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்புள்ளி படிவங்களை https://tntenders.gov.in/. heetps://mtcbus.tin.gov.in/, https://tnidb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்வையிட்டுக் கொள்ளலாம்.

ஒப்பந்ததாரர்கள் தங்களது ஒப்பந்தப்புள்ளி படிவங்களை அரசு இணையதள முகவரி https://tntenders.gov.in/nicgep/app-யில் பதிவேற்றம் செய்யலாம்.

ஒப்பந்தப்புள்ளி படிவங்களை இன்று முதல் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். படிவங்களை 10.3.2025 அன்று முதல் பதிவேற்றம் செய்யலாம். பதிவேற்றம் செய்ய இறுதி நாள் 03.04.2025 அன்று மாலை 4 மணிவரை ஆகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *