மசூதியில் துப்பாக்கிச் சூடு – 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

அமெரிக்காவில் உள்ள மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாண்டியாகோ நகரில் உள்ள மசூதியில் சிறுவர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வழிபாட்டு தலத்திற்குள் திடீரென 2 பேர் துப்பாக்கியுடன் நுழைந்து, தாக்குதல் நடத்தினர். இந்தத் துப்பாக்கி சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பிச்சென்ற இருவரையும் தீவிரமாகத் தேடி வந்தனர். ஆனால், சம்பவம் நடந்த மசூதிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் 17 வயது சிறுவன், 18 வயது இளைஞன் ஆகிய இருவரும் துப்பாக்கியால் தங்களை தாங்களே சுட்டு உயிர்மாயித்துக் கொண்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *