Gandhi Jayanti 2023: காந்தி ஜெயந்தி!

காந்தி ஜெயந்தி.

தேசத் தந்தை. மகாத்மா காந்தி. இவர் தான் மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி.
மகாத்மா காந்தியின் 153 -ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும் அக்டோபர் 2 -ஆம் தேதி தேசிய அளவில்  நாம் அனைவரும் அவரை நினைவு கூர்கிறாம்.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா சுதந்திரம் அடைய பாடு பட்ட தலைவர்களில் இவர் முதன்மையானவர்.
இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு  தொடர்ந்து ஊக்கமளீக்கும் அவரது உண்மை, அகிம்சை, தன்னலமற்ற சேவை ஆகியவற்ரின் கொள்கைகளை நாம் பின்பற்றி , போற்றுவதே நமது கடமையாகும்.

1869 -ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி குஜராத் மாநிலம், போர்பந்தரில்  பிறந்தார். லண்டனில் சட்டம் பயின்றார். இந்தியாவுக்கு திரும்பிய பிறகு உப்பு சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு , இயக்கம் உட்பட பல்வேறு போராட்டங்களை  பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு  எதிராக  நடத்தி சிவில் ஒத்துழையாமை  பிரச்சாரங்களை வழி நடத்தினார்.

காந்தியின்  அகிம்சை  எதிர்ப்பின் தத்துவம் சத்தியகிரகம் லட்சக்கணக்கான இந்தியர்களை  சுதந்திரப் போராட்டத்தில் சேர தூண்டியது. அவரது தலை,ஐ மற்ரும் செயல்பாட்டின் மூலம் காந்தி 1947-ல் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார்.

மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்ரும் போதனைகளை , எல்லா தலைமுறையினரும் கடைப்பிக்கவே காந்தி ஜெயந்தி  தேசிய அளவில் கொண்டாடி வருகிறோம்.

இன்றைய இளைய தலைமுறையினரும் அவருடைய சீரிய பண்புகளை பின்பற்றி நாட்டுக்கும் வீட்டுக்கும் நற்பணி  ஆற்றிட முனைய வேண்டும். மேலும் உண்மை, அமைதி, கருணை, பொதுச்சேவை , சமத்துவம் , சமூக முன்னேற்றம் இவற்றை நாம் காந்தியின் பிறந்த நாளில் இருந்து  கடைபிடித்து வாழ உறுதிமொழி மேற்கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *