இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி!

Advertisements

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் கதொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரைச் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இந்த நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நாளை (பிப்ரவரி 12) நடக்கிறது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்தப் போட்டியிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் ‘ஒயிட்வாஷ்’ செய்யும் ஆர்வத்தில் உள்ளது.

ரோகித் சர்மா கடந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திச் சதம் அடித்து நல்ல நிலைக்குத் திரும்பி உள்ளார்.

அதே நேரத்தில் வீராட் கோலி மீண்டும் நல்ல நிலைக்குத் திரும்புவதும் அவசியமாகும். முதல் போட்டியில் காயம் காரணமாக ஆடாத அவர் 2-வது போட்டியில் 5 ரன்னில் வெளியேறினார்.

இதனால் அவர் ரன்களை எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

இரு அணிகளும் நாளை மோதுவது 110-வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடந்த 109 ஆட்டத்தில் இந்தியா 60 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 44 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

2 போட்டிகள் சமனில் முடிந்தது. 3 போட்டிகளுக்கு முடிவு இல்லை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *