சட்டசபையில் தி.மு.க. பலம் உயர்வு – காங்கிரஸ் எண்ணிக்கை குறைந்தது!

Advertisements

சென்னை:

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக வி.சி.சந்திரகுமார் (தி.மு.க.) பதவி ஏற்றதன் மூலம் சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்களின் பலம் 134 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்களின் பலம் 234 ஆகும். இதில் சபாநாயகருடன் சேர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 133 ஆக இருந்தது.

காலம் காலமாகக் காங்கிரஸ் வசம் இருந்த ஈரோடு கிழக்கு தொகுதியைத் தமிழக காங்கிரஸ் கமிட்டி இந்த முறை தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுத்து விட்டது.

இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தற்போது தி.மு.க. வசமாகி உள்ளது. வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றதன் மூலம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை சபாநாயகருடன் சேர்த்து 134 ஆக உயர்ந்துள்ளது.

கட்சி வாரியாக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை வருமாறு,

தி.மு.க.-134, அ.தி.மு.க.-66, காங்கிரஸ்-17, பா.ம.க.-5, பா.ஜ.க.-4, விடுதலை சிறுத்தை-4, இந்திய கம்யூனிஸ்டு-2, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-2.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *