Advertisements

வரும் ஜூலை 4 ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதன்படி, நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.
இந்நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் வரும் ஜூலை மாதம் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் எஸ். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், கழகத் தலைவர் விஜய் தலைமையில் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், கழகத்தின் சார்பாக அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தும், மக்கள் சந்திப்புகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
Advertisements

