அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை – ஐகோர்ட் உத்தரவு.!

Advertisements

இனி எந்த அரசியல் கட்சிக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை – ஐகோர்ட் உத்தரவு

கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோட் ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வு இன்று விசாரித்தனர்.

இந்நிலையில் , இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட உயர் நீதிமன்றம், புதிய விதிமுறைகளை விதிக்கும் வரை எந்த அரசியல் கட்சிக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்துகளை பெற்று விரைவில் விதிமுறைகள் வகுக்கப்படும் என கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணையின்போது உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் எங்களையும் இடை மனுதாரராக சேர்க்க வேண்டும் என அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் வாதங்களை முன் வைக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *