நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், நீட் தேர்வு தொடர்பான மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா, அவர்களுக்கு நீதி கிடைக்குமா, என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். என்றும் நீட் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம் என்றும், குறிப்பாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு.
அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.


