சபரிமலையில் கடந்த 12 நாட்களில் ரூ.63 கோடி வருவாய்!

Advertisements

திருவனந்தபுரம்:

சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை கடந்த 15-ந்தேதி திறக்கப்பட்டது.அன்றைய நாள் முதல் தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை வந்து செல்கின்றனர்.

முதலில் சில நாட்கள் கூட்டம் குறைவாக இருந்த நிலையில் படிப்படியாகப் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைத் தேவசம் போர்டு செய்துள்ளது.

சீசன் தொடங்கிய 12 நாட்களில் சபரிமலைக்கு 9 லட்சத்து 13 ஆயிரத்து 437 பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 3 லட்சத்து 59 ஆயிரத்து 515 அதிகம். இதுபோல வருவாயும் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தக் காலகட்டத்தில் ரூ.47.12 கோடி வருவாய் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு ரூ.63.01 கோடியாக வருவாய் உள்ளது. 12 நாட்களில் கடந்த ஆண்டைவிட ரூ.15.89 கோடி வருவாய் கூடுதலாகக் கிடைத்துள்ளது. அப்பம், அரவணா விற்பனைமூலம் ரூ.32 கோடி வருவாய் வந்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *