
நீட் முறைகேடுகளுக்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி நடத்தியது குறித்து செய்தியாளர்கள் கேட்கப்பட்ட கேள்விக்கு, டென்ஷனான சபாநாயகர் ஜே.சி.பி. பிரபாகர், நிகழ்ச்சி தொடர்பான கேள்விகளை மட்டும் கேளுங்கள் என்று தெரிவித்தார்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் விடுதியில், தமிழ் விவசாய வணிகத் தொழில் மற்றும் சேவைகள் சம்மேளனம் சார்பில், தமிழர் 4.0 என்ற தலைப்பில் உலகளாவிய வர்த்தகம் மற்றும் வணிக உச்சி மாநாடு இன்று முதல் நாளை வரை நடைபெறுகிறது.
மாநாட்டை, சபாநாயகர் ஜே.சி.பி. பிரபாகர் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார். மாநாட்டில், தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட தமிழ் தொழில் முனைவோர்கள் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில், சபாநாயகர் ஜே.சி.இ.டி.பிரபாகர் பேசினார்.
அப்போது, ஜாதி மதங்களை யார், யார் எப்படி பிரிக்க முயற்சிக்கிறார்கள் என்பதை, ஜனநாயகன் திரைப்படத்தில் தெளிவாக காண்பிக்க பட்டிருந்தது என்றும். முழுமை பெற்ற மனிதன் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை வழிகாட்டும் படமாக இருந்தது என்றும், இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்றும், இறைவன் அருளால் நல்ல ஆட்சி அமைந்திருக்கிறது, ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி அமைந்திருக்கிறது எனவும், சபாநாயகர் ஜே.சி.பி. பிரபாகர் தெரிவித்தார்.



