ஆகஸ்ட் 3-ல் கர்நாடக முதல்வருடன் முதல்வர் விஜய் சந்திப்பு..!

Advertisements

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, ஆகஸ்ட் 3-ஆம் தேதி, தமிழக முதலமைச்சர் ச. ஜோசப்விஜய்  கர்நாடகா செல்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட, கர்நாடகம் எடுக்கும் முயற்சிகளுக்கு, தமிழ்நாடு அரசு எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்,  கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து இல்லாததால், காவிரியில் தமிழகத்திற்கு தேவையான நீரை திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்திலும், பாசனத்திற்காக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு தெரிவித்துவிட்டது.இந்த நிலையில், கர்நாடகா – தமிழகம் இடையில் உள்ள நீண்ட கால பிரச்சினையான, காவிரி நதி நீர் பங்கீடு பற்றியும்; மேகதாதுவில் அணை கட்டுவது பற்றியும், விவாதிக்க கர்நாடக அரசின் நீர்ப்பாசன துறை அதிகாரிகள், தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், மேகதாது அணை விவகராம் தொடர்பாக முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் வருகிற 3-ஆம் தேதி கர்நாடகம் செல்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வேளாண்துறை அமைச்சர் வினோத் தெரிவிக்கையில், கர்நாடகாவில் 3 -ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார் என்றும், கூட்டத்தில் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை காவிரியில் திறக்க வலியுறுத்தப்படும் என்றும். மேகதாது அணையை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம், அது நமது உரிமை என்றும் வேளாண்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *