ஆடுகளைக் காக்க வனத்துறையின் ‘சிசிடிவி’ வியூகம்..!

செங்கம் அருகே ஆடுகளைக் கொன்று குவிக்கும் மர்ம விலங்குகளை அடையாளம் காணவும், அதன் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் வனத்துறையினர் சிசிடிவி கேமராக்களை அமைத்து காண்காணித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள கோணந்தாங்கள் பகுதியில், விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பட்டிக்குள் புகுந்து மர்ம விலங்கு, ஆடுகளைக் கொன்று குவித்து வருகிறது.
இதனால், வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகள், அந்த மர்ம விலங்கு எது என்பதைக் கண்டறியக் கோரி வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, ஆடுகளை வேட்டையாடும் மர்ம விலங்கு எது என்பதை அடையாளம் காணவும், அதன் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் அப்பகுதியில் பல்வேறு இடங்களில் சிசிடிவி  கேமராக்களை அமைத்து காண்காணித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *