Advertisements

தமிழில் இராமயண காவியமாக உருவாக்கிய பெருமை கம்பருக்கே சேரும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கம்பன் கழகத்தின் 54 ஆம் ஆண்டு தொடக்க நாளையொட்டி, இரண்டு நாட்கள் தொடர் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழை வளர்ப்பதில் கம்பன் கழகங்கள் தொடர்ந்து செயல்படுவதாகவும், தமிழில் இராமயண காவியமாக உருவாக்கிய பெருமை கம்பருக்கே சேரும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், முனைவர் சுந்தரம் வாராதே வரவல்லாய் என்ற தலைப்பில் இலக்கியப் பேருரை நிகழ்த்தினார். இதையடுத்து, இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, நாட்டிய நாடகம் ,பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது எனக் குறிப்பிடதக்கது. தொடர்ந்து, இதற்கான ஏற்பாடுகளை கோவை கம்பன் கழகத்தின் செயலாளர் முருகேசன், இணைச்செயலாளர் சத்யநாராயணன், துணைச் செயலாளர் வீரபாலாஜி ஆகியோர் செய்தனர்.
Advertisements



