Muizzu:மதிப்பு மிகுந்த நட்பு நாடு இந்தியா; இப்போதான் புரிந்துகொண்டார் மாலத்தீவு அதிபர்!

புதுடில்லி: ‘எங்களுக்கு இந்தியா மதிப்புமிக்க பங்குதாரர் மற்றும் நண்பர்கள் என மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்தார்.

அண்டை நாடான மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, ஐந்து நாள் அரசு முறைப்பயணமாக நேற்று டில்லி வந்தார். டில்லியில் அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: மாலத்தீவு இந்தியா உடனான உறவுக்கு முன்னுரிமை அளிக்கும். எங்களுக்கு இந்தியா மதிப்புமிக்க பங்குதாரர் மற்றும் நண்பர். பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உறவுகள் கட்டமைக்கப்பட்டு உள்ளது. மாலத்தீவு இந்தியா உடன் வலுவான உறவுகளைக் கொண்டிருக்கும். பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த கூட்டாகச் செயல்படுவோம்.

மற்ற நாடுகளுடன் எங்கள் உறவு இந்தியாவின் பாதுகாப்பிற்கு எந்தப் பிரச்னையை ஏற்படுத்தாது. இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்பட்டது உள்ளூர் மக்களின் முடிவு ஆகும். இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். அன்பான அழைப்பிற்காக, இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் இந்திய அரசிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்தப் பயணம் மாலத்தீவு மற்றும் இந்தியாவிற்கு இடையே உறவை மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறேன். இந்தியா எங்களின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிக்கும் நாடுகளில் ஒன்று.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *