தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
தற்போது திருச்சிக்கு 370 கி.மீ வடக்கிலும், நாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே 210 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியிலிருந்து கிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் கார
சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறுவதாக இருந்த சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக தொலைதூர கல்வி திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனப் பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.
ணமாகக் கனமழை பெய்து வருவதால் இன்று நடைபெறவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.