Chengalpattu : வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, 50 ஆயிரம் திருட்டு.!

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் அருகே அன்னங்கால்  ஊராட்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள அன்னங்கால் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் தெருவில் முருகேச பிள்ளை, பச்சையம்மாள் இணையரின் வீடு உள்ளது.  வயதான இணையர் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனையில் உள் நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய இணையர், தங்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றைக் கொளள்ளையர்கள் திருடிச் சென்றதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.  இது குறித்து ஒரத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *