பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலம் அமைக்கும் முடிவில் தவெக அரசு தடுமாறி வருகிறதாம். மீன மக்களின் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தலைமைச் செயலகம் அமைக்கலாமா அல்லது வேண்டா என்று அரசாணை வெயிட்ட பிறகு தமிழக முதல்வர் ஆழ்ந்த ஆலோசனையில் உள்ளாராம்.
குறிப்பிட்ட இரு தூரோகிகளால், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதால், பொதுமக்கள் தவெக வேட்பாளர்கள் மீது கடும் ஆதங்கத்தில் இருக்க, மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து, எதிலும் வல்லவர் என்று முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியால் அழைத்தவரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு தீவிரமாக பிரச்சாரம் மற்றும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
பரபரப்பான இந்த இடைத்தேர்தல் பணிகளுக்கு மத்தியில், தவெக அரசை, தன் வாய்க்கு வந்த கடுமையாக வார்த்தைகளால் ஒரு விளாசு விளாசி இருக்கிறார் திமுகவின் அண்ணன் எ.வ.வேலு. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு எத்தனையோ அரசியல் கட்சிகள் எதிர்ப்பு வலுத்து வரும் இந்த சூழலில், அந்த முடிவில் இருந்து தவெக அரசு முன் வைத்த காலை பின் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தச் சூழலில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டும் விவகாரத்தில் ரசிகர்களின் இளய தளபதியும், தமிழக முதலமைச்சருமான விஜய் இன்னும் முடிவெடுக்கவில்லையாம் என பல அரசியல் விமர்சகர்களால் லாட்டரி அமைச்சர் என அழைக்கப்படும் ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துக்கு, தனது நெடுங்கால அரசியல் அனுபவத்தால் அட்டகாச பதில் கொடுத்துள்ளார் எ.வ.வேலு.
முதலமைச்சர் முடிவு எடுக்காமல் தான் அரசாணை வெளிவந்ததா? அரசாணை என்பது அரசின் கொள்கை முடிவு. அதனை விளையாட்டாக வெளியிட முடியுமா? எனக் கேள்வி எழுப்பி, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அறியாமையுடன் பேசுவதாகக் கடுமையாகச் சாடி இருக்கிறார்.
இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ள முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, “அரசாணை வெளியிட்டால் அதுதான் அரசின் கொள்கை. இதில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் அமைச்சரான பிறகும் அறியாமையில் இருக்கிறார்கள், விவரம் தெரியவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.
அரசாணை வெளியிடுவதற்கு முன்பு ஒரு அரசு பல வகைகளிலும் சந்து முதல் பொந்து வரை ஆராயும். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கவேண்டும் என்றால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும்? கடலுக்கு அருகில் அமைத்தால் அதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்குமா? இவற்றை எல்லாம் சிந்தித்துப் பார்த்துத்தான் ஓர் அரசாணை வெளியிட முடியும்.
இது வேடிக்கை இல்லை. அரசாங்கத்தின் கொள்கை முடிவுதான் அரசாணையாக வரும். முதலமைச்சருக்கு தெரியாது என்று எப்படி சொல்ல முடியும்? முதல்வர் விஜய் தான் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தாரே.. அதன்பிறகு தானே அரசாணை வந்தது. அப்படியென்றால் விவரம் இல்லாத முதலமைச்சர் என்று நீங்களே சொல்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக சுற்றிச் சுழன்று பணியாற்றி வரும் எ.வ.வேலு, கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர். இவரது தலைமையில் பல முக்கியமான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் தற்போது தலைமைச் செயலகம் அமைக்கும் விவகாரத்தில் தவெக அரசின் நிலையை கடுமையாக விமர்சித்துள்ளார்..



