National Medical Commission: சர்ச்சையில் சிக்கியது

Advertisements

தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் ‘பாரத்’ இந்துக் கடவுளின் உருவம்.. !  சர்ச்சையில் சிக்கிய தேசிய மருத்துவ ஆணையம்.

தேசிய மருத்துவ ஆணையம் அறிமுகப்படுத்திய சின்னத்தில் பாரத் பெயர் மற்றும் இந்துக் கடவுள் உருவம் இடம் பெற்றுள்ளதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

தேசிய மருத்துவ சின்னத்தில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் இந்து கடவுள் தன்வந்திரியின் புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது. மூவர்ணக் கொடியின் நிறத்தோடு பாரத் என்ற பெயரும் சின்னத்தில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. சின்னத்தில் மதச்சாயம் பூசப்பட்டு உருவம் உள்ளது தவறு என்று எதிர்ப்பு எழுந்த நிலையில் தன்வந்திரியின் புகைப்படம் ஏற்கனவே இருந்ததாகவும் தற்போது அதற்கு வண்ணம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய மருத்துவ ஆணையத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்  இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்று பெயர் அச்சிடப்பட்டதில் தவறு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களின் பெயரை ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் என பெயர் மாற்றியதற்கு  ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பியது. தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் பி.என்.கங்காதர் “குறிப்பிடத்தக்க வகையில் ஏதும் மாற்றப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தன்வந்திரியின் புகைப்படம் ஏற்கனவே லோகோவில் வண்ணம் தீட்டப்படாமல் இருந்தது.  தற்போது வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது அவ்வளவு தான் இதை ஏன் பெரிது படுத்துகிறீர்கள் என்றார். தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்கப்பட்ட போது லோகோவில் தன்வந்திரியின் புகைப்படத்தை சின்னத்தில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. சில நாடுகளில் அப்பலோ குணப்படுத்தும் கடவுள். இந்தியாவில் ஆரோக்கியம் மற்றும் குணப்படுத்தும் கடவுளாக தன்வந்திரி இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

கேரளப் பிரிவு தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் கேரளப்  தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளது. அறிவியல் நோக்கோடு மட்டுமே  செயல்பட வேண்டிய அமைப்பு   மதச்சின்னங்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நவீன விஞ்ஞான சமூகத்தால் இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது எனவே உடனடியாக மாற்றம் செய்யவேண்டியது கட்டாயம் என்று தெர்வித்துள்ளது.  இந்திய மருத்துவ சங்கத்தின் கேரளப்பிரிவு.

மேலும் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் இந்து கடவுள் தன்வந்திரியின் புகைப்படம் இணைக்கப்பட்டதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில்  இருந்த அசோக சக்கரம் நீக்கப்பட்டு இந்து கடவுள் தன்வந்திரி படம் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆணையம் தன்வந்திரி நிலையமாக முடியாது. நவீன மருத்துவத்தை அறிவியலோடு பார்க்காமல் விளையாட்டுத்தனமாக செயல்படுவது மக்களின் உயிரோடு விளையாடுவது” என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள், பெயர்கள் கூட ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திராக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. டேக்லைனாக ஆரோக்ய பிரணாம் தனம் என சேர்க்கப்பட்டிருந்ததும் சர்ச்சயை ஏற்படுத்தியது  குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *