பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘இரண்டு வானம்’ திரைப்படம் அக்டோபர் 23 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பிரபல நடிகர் விஷ்ணு விஷால் ‘இரண்டு வானம்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இளம் நடிகை மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில், டி.ஜி. தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இயக்குநர் ராம்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் இத்திரைப்படம் அக்டோபர் 23 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


