வீட்டுக்குள் அழுகிய நிலையில் இருந்த மனித உடல்..! நடந்தது என்ன.?

Advertisements
தஞ்சாவூர் மாவட்டம் சக்கராப்பள்ளியில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் புரோட்டா மாஸ்டர் உடல் கண்டெடுக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் ஐயம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி காதிரியா நகர் தெருவைச் சேர்ந்தவர் ஜாபர் சாதிக். இவரது மனைவி கதீஜா கனி. இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகன் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் கதீஜா கனி எட்டு ஆண்டுகளாக கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
உணவகத்தில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்த ஜாபர் சாதிக் குடும்பத்துடன் தொடர்பு இல்லாமல் தனியாக வசித்து வந்தார். அவர் வீட்டில் தீயநாற்றம் வீசவே சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவைத் தட்டியும் திறக்கவில்லை.
இதையடுத்துக் காவல் துறையினரும், பொதுமக்களும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜாபர்சாதிக்கின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது.
உடலைக் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *