இடைத்தேர்தலையொட்டி வரும் திங்கட்கிழமை மதுராந்தகத்திலும், ஒன்றாம் தேதி தாராபுரத்திலும் கூட்டணி கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா தனது சட்டமன்ற அலுவலகத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், இடைத்தேர்தலையொட்டி வரும் திங்கட்கிழமை மதுராந்தகத்திலும், ஒன்றாம் தேதி தாராபுரத்திலும் கூட்டணி கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார். கடலூரில், நெல்லை பாதுகாக்க கிடங்குகள் அமைக்க, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஜெம் கிரானைட் வீரமணி பாலியல் குற்ற வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றார். மேலும் தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு பிரச்சணைக்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, மாவட்ட துணை செயலாளர் வேல்முருகன், நகர செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

