Advertisements

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடவில்லை என்றும், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்பதாகவும் அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து, அதன்வெற்றிக்காகக் கடுமையாக உழைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதற்காக மக்கள் நீதிமையத்துக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைத் திமுக வழங்கியதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய இக்கட்டான அரசியல் சூழலில் திமுக தருவதாகச் சென்ன தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும் தனக்கு ஏற்புடையதாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இந்த முடிவைச் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகத்துக்குச் சென்று ஸ்டாலினிடம் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Advertisements