கர்நாடக துணை முதல்வர் மீது அமைச்சர் நிர்மல்குமார் பாய்ச்சல்!!

Advertisements

தனது அரசியல் காரணங்களுக்காக, மேகதாது விவகாரத்தில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் அரசியல் செய்து வருவதாக, தமிழ்நாடு அரசின் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டத்துறை நூலக அறையில், சட்டத்துறை சார்பில், அரசு உதவி வழக்கறிஞர்கள் 45-பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கலந்து கொண்டு, புதிதாக நியமிக்கப்பட்ட அரசு உதவி வழக்கறிஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியை தொடர்ந்து, அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சட்டதுறை சார்பில்,  அரசு உதவி வழக்கறிஞர்கள் 45-பேருக்கு பணி நியமன ஆணையும், 5 சட்ட கல்லூரி பொருளாளர் பதவி உயர்விற்கான ஆணையும் வழங்கபட்டுள்ளது எனவும், கோவை வழக்கில் விரைவில் நீதியை பெற்றுத் தர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றும், போக்ஸோ வழக்குகளை விரைந்து முடிக்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்கவும் உத்தரவிடபட்டுள்ளது எனவும், போக்ஸோ வழக்குகளில் நீதிமன்றம் கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்து, விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ளது எனவும், சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *