15 நாள் வேலைக்கு 50 நாட்களா?

Advertisements
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வர் கோளாறு காரணமாக இரண்டு மாதமாகப் பட்டா உட்பிரிவு பிரித்து வழங்கும் இணையத்தளப் பிரச்சனையில் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பழனி வட்டாட்சியர் அலுவலகத்தில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் சபரி என்பவர் பட்டாவை இணையத்தளத்தில் பிரிப்பதற்காக மனு கொடுத்து 50 நாட்களைக் கடந்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 15 நாட்களில் பட்டா டிவிசன் மாற்றப்படும் எனக் கூறிய நிலையில் 50 நாட்களைக் கடந்தும் தனக்கு பட்டா எதுவும் இதுவரை மாறவில்லை என்று தெரிவித்தார்.
சர்வர் பிரச்சனையால் பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு சர்வர் பிரச்சனையைச் சரி செய்து கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *