Lok Sabha Speaker Election: வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்குத் தேர்தல்..!

சபாநாயகர் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் கே.சுரேஷும் போட்டியிடுகின்றனர்.

மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்துக்கு வராததால் முதல் முறையாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.என்.டி. ஏ தனது வேட்பாளராகப் பாஜக எம்பி ஓம் பிர்லாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் கேச்சுரேஷ் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பாகப் போட்டியிடுகிறார்.

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலானது நாளைக் காலை 11 மணிக்குச் சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் நடைபெறுகிறது.

மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட பாஜக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதே நேரத்தில் இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் மனு தாக்கல் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *