பயிர் கடன் தள்ளுபடி விவகாரம் : விவசாயிகள் எதிர்ப்பு.!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட பயிர் கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பை கண்டித்து விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் வெளிநடப்பு செய்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி இந்திரா தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் தொடங்கிய சில நேரத்திலேயே, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பை கண்டித்து விவசாயிகள் ஒட்டுமொத்தமாக கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இதன் பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடிய விவசாயிகள், தற்போது பல்வேறு நிபந்தனைகளுடன் 50 சதவீத கடன் தள்ளுபடி அறிவித்து விவசாயிகளை ஏமாற்றமடைய செய்துள்ளனர் என்று குற்றம்சாட்டினர். இதனையடுத்து, வெளிநடப்பு செய்த விவசாயிகளை அரசு அதிகாரிகள் பின்தொடர்ந்து சென்று சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

விவசாயிகளுக்கு தேநீரை வழங்கி பேச்சுவார்த்தை நடத்தினர் இதனால்,. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *