
சீனாவின் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கும் என்றும், தடையை நீக்குவதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டு லடாக்கில் இந்திய – சீனப் படையினர் கைகலப்பில் ஈடுபட்டதையடுத்து எல்லையில் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து டிக்டாக் உள்ளிட்ட சீனாவின் பல்வேறு செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில் டிக் டாக், இணையவணிகத் தளமான அலி எக்ஸ்பிரஸ், சீன் ஆகியவற்றின் மீதான தடை நீக்கப்படுவதாகச் சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவின.
இது குறித்து விளக்கமளித்துள்ள மத்திய அரசு ஏற்கெனவே தடை செய்யப்பட்ட டிக்டாக் உள்ளிட்ட செயலிகளின் மீதான தடையை நீக்கப் போவதில்லை என்றும் இது குறித்த செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.


