Kamakshi Amman Temple Kumbabhishekam: வெகு விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேகம்!

Advertisements

செய்யாறு அருகே உக்கல் மடவாளம் கிராமத்தில் பழமைவாய்ந்த ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் திரளானபக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த உக்கல் மடாவளம் கிராமத்தில் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் நவீன பண்டைய கால பழமை மாறாமல் கற்சிலை கட்டிட வேலைப்பாடுகளுடன் புதிதாக அமைந்துள்ள கோவிலில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க நான்கு கால யாகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டு யாகசாலையில் வைக்கபட்ட புனித நீர் உள்ள கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மங்கள வாத்தியம் கைலாய வாத்தியம் கேரளா சென்ட மேளங்கள் இசைக்க கலச புறப்பாடு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இராஜ கோபுரம் மற்றும் புதிய வடிவமைப்பு கொண்ட காமாட்சி அம்பாள் மூலவர் கோபுரங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட புனித நீரை கலசத்தின் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மூலவர் ஸ்ரீ காமாட்சி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இவ்விழாவில் செய்யாறு மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 5000திற்கும் மேற்பட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அருள்மிகு காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் பாதுகாப்பிற்கு ஏராளமான போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹெலிகாப்டர் மூலம் உக்கல் கிராம ஸ்ரீ காமாட்சி அம்மன் ராஜகோபுரங்களுக்கு மலர் தூவப்பட்டது, அதன் தொடர்ச்சியாக ஆயிரத்துக்கு மேற்பட்டவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *