மோகன்லால் நடிக்கும் ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் டீசர் வெளியீடு..!

Advertisements

பிரபல நடிகர் மோகன்லால் நடிக்கும் ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் இரண்டு பாகங்களும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது த்ரிஷ்யம் மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் மோகன்லால், மீனா, அன்சிபா ஹாசன் மற்றும் எஸ்தர் அனில் ஆகியோர் அதே கதாபாத்திரங்களில் மீண்டும் நடித்துள்ளனர்.

ஜார்ஜ்குட்டி மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கையில் நடக்கும் விறுவிறுப்பான திருப்பங்களை இப்படம் விவரிக்கிறது எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படம் மே 21ஆம் தேதி வெளியாகும் நிலையில் அதன் டீசர் வெளியாகி மோகன் லால் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *