
சென்னை, பெங்களூர், ஐதராபாத், புனே, மும்பை, தில்லி, வாரணமாசி, சிலிக்குரி ஆகிய நகரங்களிடையே 7 அதிவிரைவு ரயில் போக்குவரத்து வழித்தடங்கள் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணியர் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் முதன்மையான நகரங்களிடையே 7 அதிவிரைவு ரயில் போக்குவரத்து வழித்தடங்கள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.
அவை மும்பை – புனே, புனே – ஐதராபாத், ஐதராபாத் – பெங்களூர், ஐதராபாத் – சென்னை, சென்னை பெங்களூர், தில்லி வாரணாசி, வாரணாசி – சிலிக்குரி ஆகிய நகரங்களுக்கிடையில் இந்த அதிவிரைவு ரயில் போக்குவரத்து வழித்தடங்கள் அமையும் என்று குறிப்பிட்டார்.
இந்தியாவை மருத்துவச் சுற்றுலா மையமாக மேம்படுத்த ஐந்து மண்டல மையங்களை அமைக்க மாநிலங்களுக்கு உதவும் திட்டத்தைக் கொண்டு வர உள்ளதாகத் தெரிவித்தார்.
ஏற்கெனவே குஜராத்தில் அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனம் உள்ள நிலையில் மேலும் மூன்று அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனங்கள் உருவாக்கப்படும் எனத் தெரிவித்தார்.
ஆயுர்வேத மருந்தகங்கள், மருந்து ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும் என்றும், ஜாம்நகரில் உலக நலவாழ்வு நிறுவனத்தின் பாரம்பரிய மருத்துவ மையம் தரம் உயர்த்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவில் அனிமேசன், விசுவல் எபெக்ட்ஸ் கேமிங் காமிஸ் துறை வளர்ந்து வருவதால் 2030ஆம் ஆண்டில் 20 இலட்சம் வல்லுநர்கள் தேவைப்படுவர் என்றும், அவர்களை உருவாக்க 15 ஆயிரம் மேல்நிலைப் பள்ளிகளிலும், 500 கல்லூரிகளிலும் உள்ளடக்கம் படைக்கும் ஆய்வகங்களை அமைக்க மும்பையில் உள்ள படைப்பாற்றல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு உதவி செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.


