கல்வித் துறைக்கு தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா?

ஒடிசா, கேரளம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஒப்படைக்கப்பட்ட அரியவகைக் கனிமங்கள் மண்டலங்களை உருவாக்க மாநில அரசுகளுக்கு உதவி செய்யப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 – 2027 நிதியாண்டுக்கான மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை மக்களவையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசினார். அப்போது, அரியவகைக் கனிமங்கள், நிலைக்காந்தங்கள் ஆகியவற்றுக்காகக் கடந்த ஆண்டில் ஒரு திட்டம் தொடங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நிதியமைச்சர் நிர்மலா, கனிமவளம் செறிந்த ஒடிசா, கேரளம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஒப்படைக்கப்பட்ட அரியவகைக் கனிமங்கள் மண்டலங்களை உருவாக்கத் தேவையான உதவிகள் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தீத்தடுப்புக் கருவிகள் முதல் சுரங்கம் துளையிடும் கருவிகள் வரை கட்டுமானம் உட்கட்டமைப்புக் கருவிகளை உற்நாட்டில் உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறினார்.

கல்வி, நலவாழ்வு, உட்கட்டமைப்பு ஆகியவற்றுக்கான முதலினச் செலவினமாகப் 12 இலட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

இந்தியாவுக்கு வெளியே வாழும் தனியாட்கள் இந்தியாவில் செய்யும் முதலீட்டுக்கான வரம்பை ஐந்து விழுக்காட்டில் இருந்து பத்து விழுக்காடாக உயர்த்த உள்ளதாகக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *