Mkstalin:இன்னமும் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்!

சென்னை: ‛‛ இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்”, எனப் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ‛எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மத்திய பட்ஜெட்டில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் ‛ இண்டியா’ கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.

பிரதமர் மோடி அவர்களே… “தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்” என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய பட்ஜெட் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது! அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு அந்தப் பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *