மாநில மக்கள் பாஜகவை நம்பிக்கையுடன் எதிர்நோக்குகின்றனர் – பிரதமர் மோடி

திரிணாமூல் காங்கிரசின் தவறான ஆட்சிமுறையால் மேற்கு வங்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மாநில மக்கள் பாஜகவை நம்பிக்கையுடன் எதிர்நோக்குவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் துர்க்காபூரில் இன்று நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். அங்கு ஐயாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் எண்ணெய், இயற்கை எரிவாயு, மின்னாற்றல், ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை

ஆகிய துறைகளின் சார்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களைத் தொடக்கியும் வைக்கிறார்.

இந்நிலையில் அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திரிணாமூல் காங்கிரசின் தவறான ஆட்சிமுறையால் மேற்கு வங்க மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பாஜகவை நம்பிக்கையுடன் எதிர்நோக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *