காதலை வெளிப்படுத்தும் ரோஜா.. ஒவ்வொரு நிற ரோஜாவுக்கும் ஒவ்வொரு அர்த்தம்!

Advertisements

ரோஜா என்பது காதலர்கள் மட்டும் பரிமாறிக்கொள்ள வேண்டிய அன்பு பரிசு கிடையாது. உங்கள் அன்புக்குரியவர்கள், நண்பர்களாக இருந்தாலும் சரி, சகோதர சகோதரியாக இருந்தாலும் சரி நீங்கள் ரோஜாப்பூவை பரிசாகக் கொடுக்கலாம்.

ஆனால் ஒவ்வொரு நிற ரோஜாவுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. எந்த நிற ரோஜா எந்த அர்த்தத்தைக் குறிக்கிறது என்பதைப் பற்றித் தற்போது தெரிந்துகொள்ளலாம்.

ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே காதலர்களின் கொண்டாட்டங்கள் தொடங்கி விடுகின்றன.

அந்த வகையில், பிப்ரவரி 7ஆம் தேதி அன்று, ரோஜா தினத்துடன் காதலர் தினம் கொண்டாட்ட வாரம் தொடங்குகிறது. காதலுக்கும் ரோஜாவிற்கு பெரும் தொடர்பு இருக்கிறது. ரோஜா பூ என்பது காதலின் அடையாளமாகவே திகழ்கிறது.

ரோஜா என்பது காதலர்கள் மட்டும் பரிமாறிக்கொள்ள வேண்டிய அன்பு பரிசு கிடையாது. உங்கள் அன்புக்குரியவர்கள், நண்பர்களாக இருந்தாலும் சரி, சகோதர சகோதரியாக இருந்தாலும் சரி நீங்கள் ரோஜாப்பூவை பரிசாகக் கொடுக்கலாம்.

ஆனால் ஒவ்வொரு நிற ரோஜாவுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. எந்த நிற ரோஜா எந்த அர்த்தத்தைக் குறிக்கிறது என்பதைப் பற்றித் தற்போது தெரிந்துகொள்ளலாம்.

ரொமான்ஸ் என்றால் சிவப்பு ரோஜா :

சிவப்பு நிற ரோஜா என்றாலே காதலையும், ரொமான்சையும் குறிக்கிறது. ரொமாண்டிக்காக வெளிப்படுத்த நீங்கள் ஒற்றை ரோஜாவைக் காதலர் அல்லது காதலிக்குப் பரிசாகக் கொடுக்கலாம் அல்லது ரோஜா பூங்கொத்தையும் பரிசாகத் தரலாம்.

ரோஜா பூக்களில் சிவப்பு நிற ரோஜா மிகவும் ஸ்பெஷல்.

Passionஐ வெளிப்படுத்தும் ஆரஞ்சு நிற ரோஜா :

ரொமான்ஸ் என்பதைத் தவிர்த்து உறவின் மீது நீங்கள் எவ்வளவு passion-ஆக இருக்கிறீர்கள் என்பதை ஆரஞ்சு நிற ரோஜா குறிக்கிறது.

அதாவது ஆரஞ்சு நிற ரோஜாப் பூக்கள் கொண்ட  பொக்கேவை நீங்கள் பரிசளிக்கும்பொழுது நீங்கள் உறவில் அடுத்த கட்டத்துக்குச் செல்லத் தயாராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

காதலை சொல்ல வெட்கப்படுபவர்களுக்கு பீச்  (peach color) நிற ரோஜா :

பீச் நிற ரோஜா என்பது நீங்கள் காதலிக்கிறீர்கள் என்பதை மறைமுகமாகத் தெரிவிக்கும் வண்ணம்.

நீங்கள் ஒருவர் மீது விருப்பம் கொண்டிருக்கிறீர்கள், நேசிக்கத் தொடங்கி இருக்கிறீர்கள் என்பதை மிக அழகாக வெளிப்படுத்தப் பீச் ரோஜாவைப் பயன்படுத்தலாம்.

உங்களுக்குக் காதலை சொல்லத் தயக்கமாகவும் வெட்கமாகவும் இருந்தால் இந்த நிறம் கைகொடுக்கும்.

ஆண்டாண்டு கால நட்புக்கு மஞ்சள் ரோஜா :

காதலுக்கு மட்டும் தான் ரோஜாக்களா, நட்புக்கு இல்லையா என்று கேட்பவர்களுக்கு, இருக்கவே இருக்கிறது மஞ்சள் நிற ரோஜாக்கள். மஞ்சள் நிற ரோஜா என்பது வாழ்நாள் முழுவதும் உடன் வரும் நட்பைக் குறிக்கிறது.

நெருங்கிய நண்பர்கள்மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்துவதற்கு மஞ்சள் ரோஜாவைக் குடுக்கலாம்.

கண்டதும் காதல் :

வெளிர் ஊதா நிற ரோஜாப்பூ மிக மிக அரிதானது மற்றும் அழகானது. யாராவது உங்களுக்கு வெளிர் ஊதா நிற ரோஜாவைக் கொடுத்தால் முதல் பார்வையிலேயே காதல் கொண்டவர் என்ற அர்த்தத்தை அது குறிக்கிறது.

அதாவது, லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் (love at first sight) என்று கூறப்படும் கண்டதும் காதல்!

மரியாதையை, அபிமானத்தை வெளிப்படுத்த இளஞ்சிவப்பு ரோஜா :

இளஞ்சிவப்பு ரோஜா என்பது நன்றி உணர்வையும், மற்றவர்களை நீங்கள் ரசிப்பதையும் வெளிப்படுத்துகிறது. நீங்கள் யாரை அதிகமாக மதிக்கிறீர்களோ அவர்களுக்குக் கொடுக்கலாம்.

தூய்மை, விசுவாசம் மற்றும் இளமையான காதலின் அடையாளம் வெள்ளை ரோஜா :

வெள்ளை நிற ரோஜா என்பது தூய்மையை, அமைதியை மற்றும் இளமையான காதலைக் குறிக்கிறது. அது மட்டுமல்லாமல் இது நேர்மையையும் குறிக்கிறது.

நீங்கள் காதலர் தினத்தன்று யாருக்காவது வெள்ளை நிற ரோஜாவைக் கொடுத்தால் அவர்கள்மீது நீங்கள் விசுவாசத்துடன் இருக்கிறீர்கள் என்றும் எதிர்காலத்தை அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறீர்கள் என்ற நம்பிக்கையும் வெளிப்படுத்துவதாக அமையும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *