
நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது எனத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நீட் தேர்வின் பிரச்சனை எப்போதுமே நடைமுறை சார்ந்தது மட்டுமல்ல, அது கட்டமைப்பு ரீதியானது என்றும் சமீபத்திய நிகழ்வுகள் அந்தக் கவலையை உறுதிப்படுத்தியுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் மத்திய அரசுக்கு ஒரு விழிப்புணர்வு அழைப்பாக அமைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தனது சமூக வலைத் தளப் பதிவில், ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம் என்று தெரிவித்துள்ளார். நீட் தேர்வின் தடையை உடைப்பதற்கான படையாக திமுக என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.




